6-வது TNPL. கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான சேப்பாக் சூப்பர் கில்லீசும், லைக்கா கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்கின.
பூவா தலையா போட்டியில் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லைக்கா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் சாய் தர்சன் 45 பந்தில் 65 ஓட்டங்களை பெற்றார். கங்கா ஸ்ரீதர் ராஜு 27 ஓட்டங்களையும், ஷாருக் கான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
சேப்பாக் அணி சார்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் கவுசிக் காந்தி ஒரு ஓட்டத்துடனும், ஜெகதீசன் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 4 ஓவர்கள் முடிந்த நிலையில் சேப்பாக் அணி 2 விக்கெட் இழப்புக்கு 14 ஓட்டங்களை எடுத்திருந்தது.
எனினும் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, TNPL வெற்றிக் கிண்ணத்தை சேப்பாக் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.