நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கண்டியில் நேற்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.