ஜப்பானில் உள்ள தாய்ஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் கோரப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 22ஆம் திகதி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, குசலா சரோஜனி வீரவர்தன தலைமையில் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த குழு நியமிக்கப்பட்டது.
இதேவேளை,இந்த தொடர்பாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ். எம். நிஷார் மவ்லானா என்ற நபரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.