குறுகிய காலத்திற்கு நாடாளுமன்றத்தில் தேசிய இணக்கப்பாட்டுடன் கூடிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பின்வரிசை உறுப்பினர்களை ஈடுபடுத்துமாறு பொறுப்பானவர்களுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிகழ்வொன்றில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் சகோதரத்துவத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என கூறியுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய குறித்த இயக்கத்தின் தலைவராகவும் நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் மற்றும் சமூக நீதிக்கான ஆலோசனைகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.