மட்டு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் உள்ள 3 வீடுகளை கடந்த 26ஆம் திகதி அதிகாலையில் உடைத்து தங்கநைக மற்றும் பணத்தை கொள்ளையடித்த வாழைச்சேனை நாவலடி பகுதியைச் சேர்ந்த கொள்ளையன் ஒருவரை சனிக்கிழமை கைது செய்ததுடன் கொள்ளையடிக்கப்பட் பொருட்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள சந்தை வீதியிலுள்ள வீடு ஒன்றிலும், பி.எச் குறுக்கு வீதியிலுள்ள வீடுஒன்று உட்பட 3 வீடுகளில் கடந்த 26ஆம் திகதி அதிகாலையில் சுமார் 2 மணித்தியாலத்துக்குள் யன்னல்களை உடைத்து உள் நுளைந்து அங்கிருந்த 4 பவுண் கொண்ட தங்க ஆபரணங்கள் 2 இலச்சம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் வாழைச்சேனை நாவலடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரை கைது செய்து விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை தனியார் கம்பனியில் அடைவ வைத்த நிலையில் மீட்டுள்ளதுடன் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீமின்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.