தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் நாடாளுமன்றம் நாளை (18) கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (17) நடைபெற்ற நாடாளுமன்ற வேலைகளுக்கான குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகப் நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத்துறை இதனை அறிவித்துள்ளது.












