கிரிமியாவில் உள்ள கருங்கடல் கடற்படைத் தலைமையகத்தின் மீது, உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இதனால், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்படை தினக் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவின் மிகப்பெரிய நகரமான செவாஸ்டோபோலின் ஆளுனர் மிகைல் ரஸ்வோஜாயேவ், இந்த சம்பவத்தை டெலிகிராமில் தெரிவித்தார்.
‘ஆரம்ப தரவுகளின்படி, ஒரு அடையாளம் தெரியாத பொருள் கடற்படை தலைமையகத்தின் முற்றத்தில் பறந்தது. இது ஒரு ஆளில்லா விமானம்’ என்று ரஸ்வோஜாயேவ் எழுதினார்.
இதன்போது, ‘ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், பாதுகாப்புக் காரணங்களால் திட்டமிடப்பட்ட அனைத்து விழாக்களும் இரத்து செய்யப்பட்டதாகவும் ஆளுநர் கூறினார்.