இரு நாட்டு எல்லையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகளுக்கும், ஈரான் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் மாகாணத்திற்கும் ஈரானின் ஹிர்மண்ட் பிராந்தியத்திற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சண்டையில் தங்கள் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு ஒவ்வொரு நாடும் மற்றவரை குற்றம் சாட்டின. ஓராண்டுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதில் இருந்து எல்லையில் பல மோதல்கள் நடந்துள்ளன. சமீபத்திய மோதலின் சரியான சூழ்நிலைகள் தெளிவாக இல்லை.
நிம்ரோஸ் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பஹ்ராம் ஹக்மல் கூறுகையில், ‘எங்கள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளனர்’ என கூறினார்.
ஈரானின் சிஸ்டன் வா பாலுசெஸ்தான் மாகாணத்தில், ஹிர்மண்ட் அதிகாரி மைசம் பரசாண்டே, ஈரானிய தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.
ஈரானின் செய்தி நிறுவனம், தலிபான் படைகள் ‘ஆப்கானிஸ்தான் பிரதேசம் அல்லாத ஒரு பகுதியில் தங்கள் கொடியை உயர்த்த முயன்றதை அடுத்து சண்டை வெடித்ததாகவும் இந்த சண்டை பல நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்தது எனவும் கூறினார்.
கடந்த மாதம் ஈரானின் வெளியுறவு அமைச்சகம், அதே பகுதியில் மற்றொரு சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானிய எல்லைக் காவலர் ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.