அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்து அந்நாட்டுடனான தனது வர்த்தகத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ளது.
அவரது விஜயம் இடம்பெற்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என பெய்ஜிங் எச்சரித்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மணல் ஏற்றுமதியையும் தாய்வானிய சிட்ரஸ் பழங்கள் மற்றும் சில வகை மீன்கள் இறக்குமதியையும் நிறுதியுள்ளதாக சீன வர்த்தக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த இறக்குமதி பொருட்களில் பூச்சிக்கொல்லி மற்றும் கொரோனா இருப்பதால் உணவு இறக்குமதி நிறுத்தப்பட்டதாக சீனாவின் சுங்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சீனாவின் சுங்க நிறுவனத்தின் குறித்த அறிவிப்பை அடுத்து 100 க்கும் மேற்பட்ட தாய்வானிய உணவு நிறுவங்கள் தடுப்புப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் குறிப்பிடப்படாத சட்ட விதிகளுக்கு ஏற்ப மணல் ஏற்றுமதியை நிறுத்தியதாக சீன வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.