பொதுமக்கள் தங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பான QR குறியீட்டை ஏனைய தரப்பினர் பெற்றுக்கொள்ளும் வகையில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட QR குறியீடுகளை ஏனைய தரப்பினர் புகைப்படம் எடுத்து எரிபொருளைப் பெற்ற சில சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தற்போது பயன்படுத்தும் QR குறியீட்டை இரத்து செய்து அதற்கான புதிய குறியீட்டை பெறுவதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருளைப் பெறுவதற்கு 53 இலட்சத்து 98 ஆயிரத்து 63 பேர் பதிவு செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.