மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் மேலும் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக கீழ் உலப்பனை, கம்பளை, கெலிஓயா, பேராதனை, கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் மகாவலி ஆற்றை அண்மித்த தாழ்நிலங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் ஆர்.எம்.எஸ். வத்சலா குறிப்பிட்டுள்ளார்.