சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா விசா காலம் முடிவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இருந்து மேலும் 14 நாட்கள் நீடிப்பை கடந்த மாதம் 27ஆம் திகதி பெற்றுக்கொண்டார்.
இந்த நீடிப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில் விசாவை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்க சிங்கப்பூர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ தலையீடு இருக்காது என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் தங்கியிருப்பது தொடர்பில் இலங்கை பிரதமர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர், கடந்த மாதம் 13 ஆம் திகதி மாலைதீவுக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி, அங்கிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.