இஸ்ரேல்- காஸா சண்டையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 51 பேர் இறந்துள்ளதாகவும் இதில் 24 பேர் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காஸாவிலிருந்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினர் இதுவரை 1,100 ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சுமார் 200 ரொக்கெட்டுகள் காஸா நாட்டிற்குள்ளே விழுந்ததாகவும் இதனை பிரீங்கிங் டவுன் என்ற ஆப்ரேஷன் மூலம் சிறப்பாக முறியடித்து 96 சதவீதம் வெற்றி கண்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
எனினும், எகிப்தின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் மூன்று நாட்களாக நீடித்த போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 11 நாட்கள் மோதலுக்குப் பின்னர் இடம்பெற்ற மிகக் கடுமையான மோதல் இது என்றும் இதில் குறைந்தது 44 பேர் இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் போர் நிறுத்தத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போர்நிறுத்தத்தை பாராட்டிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காசாவிற்கு எரிபொருள் மற்றும் மனிதாபிமான பொருட்களை வழங்கவும் உத்தரவிட்டார்.