நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தபட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த அச்சுறுத்தலினால்தான் அவர்கள், ஜனாதிபதி தெரிவின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
வாக்களிக்காவிட்டால் விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த ஜனாதிபதித் தெரிவானது சட்டபூர்வமானது அல்ல. நாடாளுமன்றில் இதன் வாக்கெடுப்பு இடம்பெற்றாலும் நாடாளுமன்றுக்கு வெளியிலேயே உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்- என்றார்.