கிரிமியாவுடன் தொடங்கிய உக்ரைன் போர் அதன் விடுதலையுடன் முடிவுக்கு வர வேண்டும் என ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
அங்குள்ள ரஷ்ய விமானப்படை தளத்தில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் ஒருவர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
கிரிமியா உக்ரேனிய நாடு என்றும் நாங்கள் அதை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிரிமியா உத்தியோகப்பூர்வமாக உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்தாலும் சர்வதேச சமூகம் சட்டவிரோதமானது என கருதும் வாக்கெடுப்புக்குப் பின்னர் 2014 இல் ரஷ்யாவுடன் இணைந்தது.
போர் முடிவடைவதற்கு முன்னர் உக்ரைன் தீபகற்பத்தை மீட்டெடுக்க வேண்டும் என நம்புவதாகவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.