மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் சமூக நீதிக் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
குறைந்த மின்சார அலகுகளை பயன்படுத்தும் வீட்டு மின்சார நுகர்வோர் மீது அதிக சுமையை அரசாங்கம் ஏற்றியுள்ளது என அவர் கூறினார்.
ஆகவே மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய கட்டண திருத்தமானது நியாயமற்றது என பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
மின்சார சபையின் அனைத்து நஷ்டங்களையும் மக்கள் மீது சுமத்துவது நியாயமில்லை என்றும் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.
இதேவேளை, அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை செலுத்த முடியாதவர்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர், திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.