பிராந்தியத்தில் சீனா, அமைதியை சீர்குலைத்தால், அது உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லையில் இணக்கமற்ற சூழல் நிலவும் வரையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இயல்பாக இருக்காது என்றும் அவர் கூறினார்.
சீனா உடனான இந்தியாவின் உறவு சீராக இல்லாதமைக்கு, எல்லை பிரச்னைதான் காரணம் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
இதவேளை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக ஒரு நாடு செயற்பட்டு வருகிறது என ஜெய்சங்கர் கூறினார்.
எனினும், களத்தில் இராணுவம் முழுமையான பிடிப்புடன் செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்தார்.