ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.
இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 30 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.