தேசிய பாதுகாப்பு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் ஸ்திரமின்மை மற்றும் வங்குரோத்து நிலை காரணமாக பலம் வாய்ந்த நாடுகளுக்கு இலங்கை இரையாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.