ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது.
கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திலேயே இந்த சந்திப்பில் ஐ.நா.வின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார், ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் மற்றும் ஐ.நா.வுக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.