கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை(சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் நாளை மறுதினம் அதிகாலை 9 மணிவரை காலப்பகுதியில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு 4 பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எனவே, நீர் வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.