முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கு வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டை கட்டியெழுப்ப பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் வலியறுத்தினார்.
இருப்பினும் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க அவதானம் செலுத்த வேண்டும் என்றும் சாகர காரியவசம் வலியறுத்தினார். (நன்றி கேசரி)