இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஃபின்லாந்து பிரதமராக இருந்துவரும் சன்னா மரின், விருந்தொன்றில் கலந்துக்கொண்ட காணொளியொன்று வெளியானதைத் தொடர்ந்து, போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
வெளிப்படையான காதலுக்காக அடிக்கடி விமர்சனங்களுக்கு இலக்காகி வரும், சன்னா மரின், ஒரு விருந்தில் பாடுவது, நடனம் செய்வது மற்றும் குடிப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இதனைத்தொடர்ந்து, 36 வயதான சன்னா மரின், சில அரசியல்வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர்கள், சன்னா மரின் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரினர்.
இதற்கமைய, நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட சன்னா மரின், போதைப்பொருள் தான் தேர்வில் கலந்து கொண்டதாகவும், அடுத்த வாரம் முடிவுகளை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அத்துடன், தனது இளம் வயது பருவத்தில் கூட நான் எந்த வகையான மருந்துகளையும் பயன்படுத்தவில்லை என அவர் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தனது 34 வயதில் ஃபின்லாந்து பிரதமராக பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளவயது பிரதமர் என்ற பெருமையை சன்னா மரின், பெற்றார்.
ஆனால் அவர் பிரதமராக இருந்த காலம் ஃபின்லாந்திற்கு கடினமான காலம். கொவிட் தொற்றுக்காலம் மற்றும் அண்டை நாடான ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாகும்.
அவர் 35 வயதுக்கு மேற்பட்ட மற்ற நான்கு பெண் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் மத்திய- இடது கூட்டணிக்கு தலைமை தாங்கினார்.