பாலஸ்தீனியர்கள் விவகாரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தூதரக ரீதியாக, இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே நீண்டு வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் துருக்கி தலைநகர் அங்காராவில, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சொக்கும், துருக்கி ஜனாதிபதி தையுப் எர்டோகனும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தைக்கு பிறகு, இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துள்ளது.
இதன்பலனாக, விரைவில் துருக்கி தூதரகம் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் திறக்கப்பட்டு தூதரக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
அதேபோல், இஸ்ரேலின் தூதரகம் துருக்கியின் அங்காராவில் திறக்கப்பட்டு தூதரக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும், வர்த்தம் உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயற்பட இரு நாடுகளும் இணைந்து செயற்பட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பல ஆண்டுகளாக இஸ்ரேல் – துருக்கி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலை நிறுத்த வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.