பயங்கரவாதத் தடைச் சட்டப் பயன்பாடு குறித்த தகவல்கள் தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கரிசனை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளிற்கான மதிப்பிற்கு முரணான விடயம் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சட்டத்தை பயன்படுத்துவதில்லை என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.