பயங்கரவாதத்தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையதாக அமையாத சட்டங்களைப் பயன்படுத்துவது நாட்டின் ஜனநாயகத்தை முற்றாக அழித்துவிடும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகம் குறித்துத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான மக்களின் உரிமையை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.