அரசியலுக்கு வருவதா இல்லையா என்பதை கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் அவருக்கு தேவையான வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து சாதகமான பதில் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விரைவில் முன்னாள் ஜனாதிபதியின் மீள்வருகைக்காக காத்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கூறியுள்ளார்.