கொரோனாவின் முதல் பூஸ்டர் டோஸைப் பெறாத சுமார் 6 மில்லியன் மக்கள் இன்னும் நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் முதல் பூஸ்டர் டோஸைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.