பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அல்ஜீரியாவிற்கு விஜயம் செய்த போது, இரு நாடுகளும் தங்களின் வலிமிகுந்த பகிரப்பட்ட வரலாற்றைத் தாண்டி எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அல்ஜீரியாவில் பிரான்ஸ் காலனித்துவ ஆட்சி குறித்த ஆவணக் காப்பகங்களை ஆய்வு செய்வதற்காக பிராங்கோ-அல்ஜீரிய வரலாற்றாசிரியர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்று தனது அல்ஜீரியப் பிரதிநிதியுடன் ஒரு கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் மக்ரோன் அறிவித்தார்.
60 ஆண்டுகளுக்கு முன்பு அல்ஜீரிய சுதந்திரத்திற்கு வழிவகுத்த கசப்பான எட்டு வருட யுத்தமும் இதில் அடங்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல தசாப்தங்களாக நிறைந்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக ஐரோப்பா எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், தனது மூன்று நாட்கள் பயணத்தின் போது, அல்ஜீரியாவின் பெரிய அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயுவை அணுகுவதற்கு மக்ரோன் ஆர்வமாக உள்ளார்.