அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு இரத்து செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நாளை திண்டிவனத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
692 கிராம குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க ஆயிரத்து 502 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு கடந்த அரசாங்க காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பின், இந்த திட்டம் கைவிட்டதால் மக்களின் குடிநீர் வாய்ப்பு பறிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.