ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நிதியமைச்சராக, இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதோடு பிற்பகல் 2 மணிவரை நிதியமைச்சரின் பாதீட்டு உரையும் இடம்பெறுவுள்ளது.
இதேவேளை நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பிக்கும் இடைக்கால வரவு செலவு திட்டம் எதிர்வரும் 04 மாதங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் சமர்ப்படவுள்ளது.
இதனையடுத்து, நாளை வரை சபை ஒத்திவைக்கப்படுவதுடன்,இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், நாளை முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் நடைபெற உள்ளமையும் குறிப்பிடதக்கது.