கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முட்டை உற்பத்தியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் கபில நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்து அரசாங்கம் அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முட்டையொன்றை 50 ரூபாவிற்கும் குறைவான விலையில் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.