சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் 4 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும் மூவாயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.