டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியிருந்தாலும், அதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற எஸ்.பி. திஸாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
எதிரணி பக்கம் சென்றவர்களில் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவானவர்களே அதிகம் எனவும், அவர்களின் வெளியேற்றத்தால் கட்சிக்கு தாக்கம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவிசாளர் எனக் கூறிக்கொள்ளும் பீரிஸ் ஓரங்கட்டப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் கட்சி செயற்பாட்டில் பங்கேற்பதில்லை என தெரிவித்துள்ள எஸ்.பி. திஸாநாயக்க, விரைவில் கட்சி சம்மேளனம் நடைபெறும். அதன்போது இவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.