நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடு சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்குமாறு அனைத்து கடன் வழங்கும் நாடுகளுக்கும் ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஜப்பானின் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி (Shunichi Suzuki ) செய்தியாளர் மாநாடு ஒன்றில் வலியுறுத்தினார்.
சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஒன்று கூடுவது முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான வழியை நாடு தேடும் நிலையில், சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பூர்வாங்க உடன்படிக்கையை எட்டியுள்ளது.