ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான நீண்டகால மோதலால் அதிருப்தியில் உள்ள ரயில் ஊழியர்கள், புதிய வேலைநிறுத்தங்களை நடத்துவார்கள் என ஆர்.எம்.டி. தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நெட்வொர்க் ரயில் மற்றும் 14 ரயில் நிறுவனங்களில் பணிபுரியும் அதன் உறுப்பினர்கள் 40,000பேர் செப்டம்பர் 15 மற்றும் 17ஆம் திகதிகளில் வெளிநடப்பு செய்வார்கள்.
இந்த வேலைநிறுத்தங்களின் முதல் நாளில், 12 ரயில் நிறுவனங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்கள் வெளிநடப்பு செய்வர்.
அதன் உறுப்பினர்களில் 9,000 பேரின் இந்த நடவடிக்கையே இதுவரை சாரதிகள் பங்குபற்றிய மிகப்பெரிய வேலைநிறுத்தமாக இருக்கும் என்று அஸ்லெஃப் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூன், ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் அதன் உறுப்பினர்கள் ஆறு நாட்களுக்கு முந்தைய வெளிநடப்பு வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த புதிய வேலைநிறுத்தம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆர்.எம்.டி. தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஆர்.எம்.டி. தொழிற்சங்க பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச் இதுகுறித்து கூறுகையில், ‘தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு வேலைநிறுத்தத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. ட்ராக் ஆபரேட்டர்ஸ் நெட்வொர்க் ரயில் மற்றும் ரயில் இயக்க நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாக எங்கள் உறுப்பினர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வகையில் புதிதாக எதையும் வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம், ஆனால் முதலாளிகளும் அரசாங்கமும் எங்கள் தொழில்துறை பிரச்சாரம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என கூறினார்.