தற்போதைய மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதி நடவடிக்கை, நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்குமாறு அவுஸ்ரேலியாவில் வசித்து வந்த கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு விடுத்த இந்த அரசாங்கம், தற்போது அவரை பதவி நீக்கம் சதி செய்வதாக குற்றம் சுமத்தினார்.
மத்திய வங்கி ஆளுநருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே நந்தலால் வீரசிங்கவை நீக்குவதற்கான முதலாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
இதற்கு அடுத்த நாளே, 20 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் பேசிய காலியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஆளுநரை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கான பின்னணியை மறைமுகமாக உருவாக்கினார் என்றும் குற்றம் சாட்டினார்.
நாட்டை விட்டு ஓடிய இரட்டைக் குடிமகன், மத்திய வங்கியைக் கொள்ளையடித்த ஆளுநரை மீண்டும் நியமிக்க முயற்சிக்கின்றாரா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.