ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை ரஷ்யா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என ஐரோப்பா குற்றம் சாட்டியுள்ளது.
நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்டுள்ள சேதம் சரிசெய்யப்படும்வரை நோர்ட் ஸ்ட்ரீம் 01 எரிவாயுக் குழாய் மூடப்பட்டிருக்கும் என ரஷ்ய அரசாங்கத்தின் காஸ்ப்ரோம் நிறுவனம் தெரிவித்தது.
அந்தக் குழாய் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து பால்ட்டிக் கடல் வழியாக ஜெர்மனி வரை செல்கிறது.
தற்போது போதுமான அளவு எரிவாயு இருப்பில் உள்ளதாக கூறியுள்ள பெர்லின், அந்த நிலைமை மோசமடையும் சாத்தியம் உள்ளதையும் மறுக்கவில்லை.