கிரீன்லாந்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நட்பு நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் இன்று அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த 8 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து உள்பட 8 நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படும் என்றும், சுங்க வரி பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், கிரீன்லாந்தை முழு உரிமையுடன் அமெரிக்கா கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஜூன் மாதம் முதலாம் திகதிக்குள் எட்டப்படாவிட்டால் , இந்த சுங்க வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கிரீன்லாந்து தற்போது டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிரீன்லாந்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நட்பு நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் இன்று அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியுடனான சர்வதேச உறவுநிலை மோசமடைந்து வருவதுடன் டொனால்ட் டிரம்பின் திட்டம் “முற்றிலும் தவறானது” என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்
இதனிடையே கிரீன்லாந்தை கையகப்படுத்தும் டொனால்ட் டரம்பின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்
















