யாழ்ப்பாணம், தொண்டமணாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது.
தொண்டமணாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து சந்நிதி முருகனை வழிபட்டு வருகின்றனர்.
ஆலயத்திற்கு வருவோரில் பெரும்பாலானோர் தொண்டமணாற்றில் நீராடியே முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் காணப்பட்டமையால் ஆற்றில் நீராடுபவர்களை அவதானமாக நீராடுமாறு ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஆற்றின் குறுக்காக இரும்பு கம்பினாலான வேலையை அமைத்துள்ளனர்.
வேலி அமைக்கப்பட்டுள்ளமையால் முதலைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், முதலைகளை ஆற்றில் இருந்து வெளியேற்ற பல தரப்புடனும் பேச்சுகளை நடத்தி வருவதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.