பிரித்தானியாவை ஆளப்போகும் புதிய பிரதமர் யார் என்பது குறித்த உத்தியோகபூர்வ முடிவு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.
பிரித்தானிய அரசமைப்புச் சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகப் பதவியேற்பார்.
அந்த வகையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தேர்தலில் லிஸ் ட்ரஸ்ஸுக்கே அதிக வெற்றிவாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அவர் வெற்றி பெற்றால் மார்கரெட் தாட்சர், தெரசா மேவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெண் பிரதமர் என்கிற பெருமையைப் பெறுவார்.
தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளிலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
ஆகையால், அவர் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அறிய முடிகின்றது.