பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது இராஜினாமா கடிதத்தை ராணியிடம் முறைப்படி வழங்கிய பின்னர், லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரலில் ராணியை சந்திப்பதற்கு முன், ஜோன்சன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது பதவிக் காலத்தின் இறுதி நேரத்தில் உரையாற்றுவார்.
பொதுவாக ஒரு புதிய பிரதமர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியால் நியமிக்க அழைக்கப்படுவார். ஆனால், பொரிஸ் ஜோன்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் இருவரும் அபெர்டீன்ஷையருக்குச் சென்று அவரைச் சந்திப்பார்கள்.
இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கு பிறகு பால்மோரலில் பதவியேற்பு நடைபெறவுள்ளது. ட்ரஸ் ராணியின் 70 ஆண்டுகால ஆட்சியின் 15ஆவது பிரித்தானிய பிரதமராக இருப்பார்.