பிரித்தானியாவின் பொருளாதாரம், மின்சார ஆற்றல், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் முழு கவனம் செலுத்தப்போவதாக புதிதாகப் பதவியேற்ற பிரதமர் லிஸ் ட்ரஸ் குறிப்பிட்டார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றவுடன், பிரதமராக பதவி வகித்து வந்த பொரிஸ் ஜோன்சன் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ராணி இரண்டாம் எலிசபெத்தால் லிஸ் ட்ரஸ் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஸ்கொட்லாந்துக்குச் சென்று ராணியை சந்தித்துவிட்டு பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் லிஸ் ட்ரஸ் உரையாற்றினார்.
இதன்போதே, அயர்லாந்து எல்லையில் அகதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை கோடிட்டு காட்டிய லிஸ் டிரஸ், பிரித்தானியாவை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தப் போவதாக உறுதியளித்தார்.