அ.தி.மு.க. தலைமையகத்தில் காலம்தாழ்ந்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருவள்ளூரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தலைமையகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை மீட்க பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் இதன்போது குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் திகதி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.