தனிப்பட்ட வரப்பிரசாதங்களைப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தினால் மக்களின் நம்பிக்கை மேலும் சிதைந்துவிடும் என இம்தியாஸ் பக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று பேசிய அவர், அவ்வாறு நடந்தால் பிற்காலத்தில் மக்கள் குறித்த உறுப்பினர்களை நிராகரிப்பார்கள் என கூறினார்.
சத்தான சாப்பாடு என்பது தேங்காய்ச் சம்பலும் சோறும் அல்ல என்றும், இன்று அத்தகைய உணவைத் தயாரிக்க எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்றும் கேள்வியெழுப்பினார்.
உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் இந்த உயர்வுக்கு ஏற்ப ஊதியங்கள் அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த தலைமுறையை நெருக்கடியில் இருந்து மீட்க பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.