இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் நிலைமை தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்தார்.
நெதர்லாந்தில் இடம்பெற்ற ஆபிரிக்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அந்த நாடுகளுக்கு கடன் சுமை உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.
60 சதவீத ஏழை நாடுகள் கடனை அடைக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால், பொருளாதாரச் செயற்பாடுகளை சாதாரணமாகச் சிந்திக்க முடியாமல் உள்ளன என்றும் கூறினார்.
கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, வலுவான வங்கி அமைப்பு மற்றும் நிலையான பொருளாதாரத்தின் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.