உரிய அனுமதிகள் இன்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் சாரதியை கைது செய்துள்ள அச்சுவேலி பொலிஸார் டிப்பர் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
பளை பகுதியில் இருந்து உரிய அனுமதிகள் இன்றி, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றியவாறு டிப்பர் வாகனம் ஒன்று வருவதாக நேற்று புதன்கிழமை அச்சுவேலி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பிரகாரம் வீதி சோதனை நடவடிக்கைளில் அச்சுவேலி பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை வழிமறித்து சாரதியை கைது செய்ததுடன், மணலுடன் வாகனத்தை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சாரதி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.