சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் அனுமதியின்றி அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துக் கட்சி ஆட்சி அமைந்தால் மட்டுமே அரசுக்கு ஆதரவளிப்பது என தனது கட்சியின் மத்தியக் குழு முன்பு முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த தீர்மானங்களை மீறி அமைச்சுப் பதவியைப் பெறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த இலாபத்தை எதிர்பார்த்து அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.