உக்ரேனியப் படைகளின் விரைவான முன்னேற்றத்தை அடுத்து வடகிழக்கு உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ளன.
ரஷ்யப் படைகளுக்கான முக்கிய விநியோக பகுதியான குபியன்ஸ்கில் நேற்று சனிக்கிழமை தமது படையினர் நுழைந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் வெடிமருந்து கையிருப்பு மற்றும் உபகரணங்களை அவர்கள் தப்பி ஓடும்போது கைவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருப்புக்களை அங்கிருந்து இருந்து வெளியேறவும், வேறு இடங்களில் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
டொனெட்ஸ்க் போர்முனையில் முயற்சிகளை வலுப்படுத்த மூன்றாவது முக்கிய நகரமான பலாக்லியாவிலிருந்து துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதையும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.
சமீபத்திய முன்னேற்றங்களும் மேற்கத்திய ஆயுதங்கள் மூலம் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இது காட்டுவதாக உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.