வீடுகள், நிலங்கள் உள்ளிட்ட நிலையான சொத்துங்கள் வாங்குதல் விற்றல் துறையானது, சீனாவில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இந்த நிலைமையானது, சீனாவில் பொருளாதாரத்திற்கு பலத்த அடியை வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனப் பொருளாதாரத்தினைப் பொறுத்தவரையில் இந்தத்துறையானது, நான்கில் ஒருபங்கினைக் கொண்டிருந்தாலும், எப்போதுமே அத்துறையானது புரியாதவொரு புதிராகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது, சீனாவில் இத்துறையானது முழுமையான சுருக்கத்தைக் காணப்போகின்றது என்றும், அரசாங்கம் இத்துறையில் தலையிடுவதா இல்லையா என்று தடுமாற்றத்தில் உள்ளதாகவும் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத்துறையானது, நெருக்கடியைச் சந்திப்பதற்கு, பிரதானமாக மூன்று காரணங்களே உள்ளன. முதலாவது, நிர்மாணங்களுக்கான அதிக விலைகள், அதிக கடன் மற்றும் திடீர் விலை வீழ்ச்சி ஆகியனவே அவையாகும்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிலையான சொத்துக்களின் விற்பனை 20-30 சதவீம் வரையில் குறைந்துள்ளது. நிர்மாணங்கள் முழுமையான முன்னேற்றங்கள் காணும் வகையில் முழுமையடையவில்லை.
அத்துடன் சில பிரதேசங்களில் மக்கள் தெருக்களில் இறங்கி, எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைமைகளால் நிர்மாணத்திட்டங்களுக்கு அடமான நிதி அளிப்பு தடைப்பட்டுள்ளது.
சீனாவின் மிகப் பெரிய வர்த்தகர்கள் தமது முதலீடுகளுக்காக பெற்ற தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர். அத்துடன் அவர்களிடத்தில் பணமில்லாமை மற்றும் பணப்புழக்க நெருக்கடியில் ஏற்பட்டுள்ளமை ஆகியன சிக்கலான நிலைமைகளை உருவாக்கியுள்ளன.
இந்த நிலைமையானது, நிர்மாணங்களுக்கான விநியோகத்தர்கள், மத்தியதர நிறுவனங்கள், மற்றும், அன்றாட தொழிலாளர்கள் ஆகியோரை வெகுவாகத் தாக்கியுள்ளது.
அதுமட்டுமன்றி, சீனாவில் அதிகளவான வங்கிகள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என்பதால், அந்த வங்கிகள் மேற்படிதுறையினருக்கு வழங்கிய கடன்களால் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன.
மேலும் குறித்த வங்கிகள் டொலர்கள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கையில், இவ்வாறான நெருக்கடி இரட்டை அழுத்தங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
இதேவேளை, பிரச்சினைகளை சீனாவின் மாநிலங்களில் உள்ள உள்ளுர் அரசாங்கங்கள் அணுகுவதற்கு முயற்சிக்கின்றன. உள்ளுர் அரசாங்கங்களின் மொத்த நிதி வருவாயில் கிட்டத்தட்ட 40சதவீதத்தை நில விற்பனை மூலம் பெறுகின்றன.
நில விற்பனை மிகவும் கடினமாக இருப்பதால், அந்த விற்பனை தொடர்பான வருவாயில் வரவிருக்கும் வருமானச் சரிவுடன், உள்ளூர் அரசாங்கங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக,. உள்ளூர் அரசாங்கங்களின் நிதி நிலைமைகள் மோசமடைந்து வருவதால், உள்ளுர் அரசாங்கங்கள் முன்னெடுக்கம் பொதுச்சேவைகளை குறைக்க வேண்டிய நிலைமைகள் தோன்றியுள்ளன. உள்ளூர் அரசாங்கத்தின் நிதியளிப்பு இயல்புநிலைக்கு மாறான நிலைமைகளை காண்பதற்கும் வழிவகுக்கலாம்.
இவ்விதமான நிலைமையானது, மக்கள் மத்தியில் உள்ள அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவதற்கான சாத்தியப்பாடுகளையே அதிகரிக்கச் செய்வதாக உள்ளது.
மொத்தச் சொத்துக்களில் கிட்டத்தட்ட 60 சதவிதமானவை நகர்ப்புற சீனக் குடும்பங்களுக்குச் சொந்தமானவை. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு காணப்படும் சொத்துக்கள் குறைந்த அளவிலேயே உள்ளன ஆகவே, சொத்து விலை சரிவு சமூக அமைதியின்மையை தூண்டுவதற்கும் வழிசமைப்பதாக உள்ளது.
இவ்வாறு நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள இந்தத் துறையை மீட்பதற்காக பீஜிங் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. அதேநேரம், இந்தத்துறையில் முதலீடுகளைச் செய்தவர்கள் அரசாங்கம் தம்மை பாதுகாக்கும் என்ற அளவுக்கதிகமான நம்பிக்கையுடன் உள்ளார்கள்.
அதற்கு சீனாவின் அரசியல் தலைமை 2022இல் சொத்துச் சந்தையை நிலைப்படுத்துவதற்கான இலக்கை அடையாளம் காட்டியுள்ளமை பிரதான காரணமாகின்றது.
மத்திய வங்கி இருப்புத் தேவை வீதத்தையும், ஒரு வருடத்திற்கான கடன் வீதத்தையும் குறைத்துள்ளது.
இந்த அனுகுமுறையே முதலீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பலருக்கு நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. ஆனால், உட்கட்டமைப்பு முதலீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள படிமுறைகள் பெரிய நிதித் திரட்டலை மையப்படுத்தியது என்பதை அவர்கள் உணரவில்லை.
எவ்வாறாயினும், சீனாவின் உயர்மட்ட நகரங்கள் வீடமைப்புத் துறையில் ஊகங்களைக் கட்டுப்படுத்தும் அதேவேளையில், அதிகரித்து வரும் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டியது சீன அரசாங்கத்தின் தேவையாக உள்ளது.
உதாரணமாக, சோங்கிங் மற்றும் செங்டு உள்ளிட்ட சில நகரங்கள், கிராமப்புறங்களில் விளைநிலங்களை அதிகப்படுத்துவதன் மூலமும், நில ஒதுக்கீட்டுச் சந்தைகளை நிறுவுவதன் மூலமும் நகர்ப்புற வீட்டு மேம்பாட்டுக்கான புதிய நில ஒதுக்கீட்டை உருவாக்கியுள்ளன.
எனினும், சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான இலட்சிய இலக்குகளை அடைய வேண்டுமானால், சீனாவின் சொத்து நெருக்கடி எப்படியாவது தீர்க்கப்பட வேண்டியது கட்டாயமாகின்றது. இல்லாது விட்டால் சீனாவின் பொருளாதாரத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அடி பேரடியாக மாறும்.